Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Butterfly அப்ளையன்சஸ் வருவாய் ரூ.331 கோடியாக உயர்வு

Butterfly அப்ளையன்சஸ் வருவாய் ரூ.331 கோடியாக உயர்வு

சரியான விற்பனை சேனல்களில், அனைத்து தயாரிப்புப் பிரிவுகளிலும் கிடைத்த சீரான வளர்ச்சியே இந்த முன்னேற்றத்துக்கு காரணம்.

பகிரவும் WhatsApp Facebook

சமையலறை உபகரணங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான பட்டர்ஃபிளை காந்திமதி அப்ளையன்சஸ் லிமிடெட், நடப்பு நிதியாண்டில் 2-வது காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவன மேலாளர் ஸ்வேதா சாகர் கூறியதாவது: இந்த நிதியாண்டு காலாண்டில் ரூ.331 கோடி வருவாயுடன் 13.1 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம். இதனால் எங்களின் இரட்டை இலக்க வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளோம்.

சரியான விற்பனை சேனல்களில், அனைத்து தயாரிப்புப் பிரிவுகளிலும் கிடைத்த சீரான வளர்ச்சியே இந்த முன்னேற்றத்துக்கு காரணம். ஆஃப்லைன், ஆன்லைன் என 2 தளங்களிலும் வலுவான விளம்பரங்கள், பிரத்யேக வர்த்தக நடவடிக்கைகளால், பிராண்டை மேலும் வலுப்படுத்துவதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்.

பட்டர்ஃபிளையின் 'யூனிகர்வ் ட்ரிப்ளை பிரஷர் குக்கருக்கு இந்தியாவின் சிறந்த வடிவமைப்பு விருது கிடைத்துள்ளது. நாட்டின் முதல் ஃபைவ் ஸ்டார் மதிப்பீடு பெற்ற ரென்ஸ் ப்ரோ குக்டாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் தயாரிப்புகள் தொடர்ந்து வலுவான விற்பனையை பதிவு செய்து வரும் நிலையில், இன்ஃப்ரா குக்டாப் தயாரிப்புகள் புதிய வளர்ச்சிக்கான உந்துசக்தியாக உருவெடுத்துள்ளன இவ்வாறு ஸ்வேதா சாகர் கூறினார்.

முந்தைய செய்தி
TATA கம்யூனிகேஷன்ஸ் நிகர லாபம் 86% உயர்வு
அடுத்த செய்தி
விக்ரம் சோலாருக்கு 187 மெகாவாட் ஆர்டர்

தொடர்புடைய செய்திகள்